Tuesday, March 1, 2011

சீரடி சாயிபாபாவின் பதினோரு வாக்குறுதிகள்.......

                                                        
(1) எவனொருவன் சீரடிக்கு வந்து கால் பதிக்கின்றனோ அவனுடைய துயரங்கள் அனைத்தும் அந்த கணமே விலகிவிடும்


(2) துர்பாக்யசாலிகளும் , துயரத்தில் மூழ்கியவர்களும் இங்கு வந்து மசூதியின் படிகளில் ஏறியவுடனேயே அவர்களுடைய மனம் குதுகூலம் அடையும் , இதயத்தில் இன்பம் உண்டாகும்.


(3) நான் எந்த பூத உடலை துறந்து விட்டாலும் கூட என்றும் போலவே அதே வேகத்துடன்தான் என் பணியை செய்து கொண்டு இருப்பேன் .

(4) என் கல்லறை கூட என் பக்தர்களுடன் பேசிக்கொண்டும் அவர்களுக்கு ஆறுதல் தந்து கொண்டும் இருக்கும் 



(5) நான் சவக்குழியில் புதைந்து இருந்தாலும் என் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்

(6) என்னுடைய இறந்து போன உடல் கூட சவக்குழியில் இருந்து என் பக்தர்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கும்



(7) என்னிடம் வந்து தஞ்சம் அடைந்தவர்களையும் , என்னையே முழுமையாக நம்பி என்னிடம் வந்து விட்டவர்கலுக்கும் நான் உதவிக் கொண்டும் , வழி காட்டிக் கொண்டும் இருப்பேன்


(8) நீ என்னைப் பார்த்தால் , நானும் உன்னைப் பார்ப்பேன்

(9) உன் பாரத்தை என் மீது இறக்கி வை , அதை நான் சுமப்பேன்



(10) நீ என்னிடம் வந்து ஆலோசனை அல்லது உதவி கேட்டால் அதை உடனடியாகத் தர நான் தயங்கவே மாட்டேன் 


11) என்னுடைய உண்மையான பக்தன் வீட்டில் அவனுக்கு எந்த குறைவும் இருக்காது.


Jai Sai Ram..................

No comments:

Post a Comment