Tuesday, March 1, 2011

ஸ்ரீ ராகவேந்திரரின் கடைசி உரை மற்றும் பிருந்தாவன பிரவேசம்



                                                          
1671 ஆம் ஆண்டு ராகவேதிர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்க்கு முன் தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கும் ஒரு உரையை தந்தார். ஆவ்வுரையிலிருந்து சில பகுதிகள்:
  • சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.

  • நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்

  • சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினானும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.

  • கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது'. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு எற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெரும் முட்டாள்த்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றும் இன்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.
இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.

[

சீரடி சாயிபாபாவின் பதினோரு வாக்குறுதிகள்.......

                                                        
(1) எவனொருவன் சீரடிக்கு வந்து கால் பதிக்கின்றனோ அவனுடைய துயரங்கள் அனைத்தும் அந்த கணமே விலகிவிடும்


(2) துர்பாக்யசாலிகளும் , துயரத்தில் மூழ்கியவர்களும் இங்கு வந்து மசூதியின் படிகளில் ஏறியவுடனேயே அவர்களுடைய மனம் குதுகூலம் அடையும் , இதயத்தில் இன்பம் உண்டாகும்.


(3) நான் எந்த பூத உடலை துறந்து விட்டாலும் கூட என்றும் போலவே அதே வேகத்துடன்தான் என் பணியை செய்து கொண்டு இருப்பேன் .

(4) என் கல்லறை கூட என் பக்தர்களுடன் பேசிக்கொண்டும் அவர்களுக்கு ஆறுதல் தந்து கொண்டும் இருக்கும் 



(5) நான் சவக்குழியில் புதைந்து இருந்தாலும் என் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்

(6) என்னுடைய இறந்து போன உடல் கூட சவக்குழியில் இருந்து என் பக்தர்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கும்



(7) என்னிடம் வந்து தஞ்சம் அடைந்தவர்களையும் , என்னையே முழுமையாக நம்பி என்னிடம் வந்து விட்டவர்கலுக்கும் நான் உதவிக் கொண்டும் , வழி காட்டிக் கொண்டும் இருப்பேன்


(8) நீ என்னைப் பார்த்தால் , நானும் உன்னைப் பார்ப்பேன்

(9) உன் பாரத்தை என் மீது இறக்கி வை , அதை நான் சுமப்பேன்



(10) நீ என்னிடம் வந்து ஆலோசனை அல்லது உதவி கேட்டால் அதை உடனடியாகத் தர நான் தயங்கவே மாட்டேன் 


11) என்னுடைய உண்மையான பக்தன் வீட்டில் அவனுக்கு எந்த குறைவும் இருக்காது.


Jai Sai Ram..................